ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்த, பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பொருளாதார நிலை குறித்துப் பேசினார்.
அதில், 'நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த இந்தியாவின் மாநிலங்களுக்கு பெரும் பங்குள்ளதாகத் தெரிவித்தார். அனைத்து மாநிலங்களும் தங்கள் முழு ஆற்றலை நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்க வேண்டும் எனத் தெரிவித்த மோடி, மாநிலங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டி நிலவுவது வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்தார்.
இந்தியப் பொருளாதாரத்தை வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலராக மாற்ற வேண்டும் என்ற கனவுத் திட்டத்தை நோக்கி, நாம் பயணிக்க வேண்டும் என்ற நரேந்திர மோடி, இந்தப் பயணத்தில் அனைத்து மாநிலங்கள் மாவட்டங்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் எனக் கூறினார்.