இந்தியா, வங்கதேசம், மியான்மர், நேபாளம், சீனா, பூடான், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் வளர்ச்சி விகிதத்தினை சர்வதேச நிதியம் கணித்துள்ளது. 2020 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில், இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 10.3 விழுக்காடு குறையும் எனக் கணித்து நிதியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இதனை மேற்கோள்காட்டியுள்ள ராகுல் காந்தி, கரோனாவை இந்தியாவைவிட பாகிஸ்தான் சிறப்பாகக் கையாண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாஜக அரசின் மற்றுமொறு சிறப்பான சாதனை. கரோனா சூழலை இந்தியாவைவிட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகள் சிறப்பாகக் கையாண்டன" எனப் பதிவிட்டுள்ளார். மேலும், ”தனி நபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் வங்கதேசம் இந்தியாவை நெருங்கி வருவதே, வெறுப்புணர்வு கலந்த கலாசார தேசியவாதத்தை கொள்கையாகக் கொண்ட பாஜகவின் சிறப்பான சாதனை” என்றும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.
இந்நிலையில், 2021ஆம் ஆண்டு, இந்தியப் பொருளாதாரம் 8.8 விழுக்காடு வளர்ச்சி அடைந்து உலகின் வேகமாக வளர்ச்சி அடையும் பொருளாதாரமாக மாறும் எனவும் சர்வதேச நிதியம் கணித்துள்ளது. இதன்மூலம் சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : தெலங்கானாவில் கனமழை: 50 பேர் உயிரிழப்பு!