கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும்விதமாக ‘ஸ்வயம்பூர்ணா மித்ரா’ என்ற புதிய திட்டத்தை கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தொடங்கிவைத்தார். இதன் பின்னர் அவர் இணைய வழி கூட்டத்தில் உரையாடியபோது கூறியதாவது:
நாளை கடவுளே முதலமைச்சர் ஆனாலும் அவர் அனைவருக்கும் அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் முடியாது.
ஸ்வயம்பூர்ணா மித்ரா என்ற இந்தப் புதிய முயற்சியின் மூலம் அரசு அலுவலர்கள் கிராமப்புறங்களுக்குச் சென்று அங்குள்ள வளங்களுக்கு ஏற்ப அந்தப் பகுதி மக்களுக்கு சுயசார்பு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.
இதன்மூலம் மாதத்துக்கு எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை வருமானத்தை ஈட்டுவதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும். பிற பகுதியிலிருந்து வந்து வேலை செய்வதற்கு ஏற்ப கோவா மாநிலத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருக்கின்றன.