தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சி.ஏ.ஏ. விவகாரத்தில் ஜனநாயக அரசின் உரிமையை கேள்விக்குள்ளாக்குவதா? - அறிவுறுத்திய இந்தியா! - குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தில் தீர்மானம்

டெல்லி: ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் செயல்படக் கூடாது என இந்திய உயர்மட்ட அலுவலர்கள் அறிவுறுத்துகின்றனர்.

EU parliament, ஐரோப்பிய நாடாளுமன்றம் குடியுரிமை திருத்தச் சட்டம்
EU parliament

By

Published : Jan 28, 2020, 7:05 AM IST

இது குறித்து அவர்கள் கூறுகையில், "குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற அதன் உறுப்பினர்கள் சிலர் முயன்றுவருகின்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னையாகும். அதுமட்டுமல்லாமல் இச்சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலிலும் சட்டப்பூர்வமாகவும், ஜனநாயக முறையிலும் நிறைவேறியுள்ளது. இந்தச் சட்டம் யாரையும் வஞ்சிக்கும் நோக்கில் கொண்டுவரப்படவில்லை. இதேபோன்ற அணுகுமுறைகளை ஐரோப்பிய சமூகங்களிலும் பின்பற்றப்பட்டுள்ளன.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் இந்திய அரசை தொடர்புகொண்டு மேற்கூறிய சட்டம் குறித்து முழுமையாக ஆராய்வர் என நம்புகிறோம். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமைகளை ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் கேள்விக்குள்ளாக்கக் கூடாது" எனத் தெரிவித்தனர்.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட ஆண்டை நாடுகளில் மதத்துன்புறுத்தலுக்கு ஆளாகி 2014 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்தியாவுக்கு அடைக்கலம் தேடிவந்த சிறுபான்மை இந்துக்கள், கிறிஸ்வதவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகளுக்கு குடியுரிமை வழங்க இந்தச் சட்டம் வழிவகைசெய்கிறது.

ஆனால் இது இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதென நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதுதவிர, பாஜக அல்லாத மாநிலங்களில் இச்சட்டத்துக்கு எதிராகத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுவருகின்றன.

இதையும் படிங்க : சிஏஏவுக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

ABOUT THE AUTHOR

...view details