- சுவாமி பத்மநாபசாமி கோயில் வழக்கு இன்று தீர்ப்பு
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலின் நிர்வாகம் தொடர்பான சச்சரவு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்காவது வாரமாக ஏற்றம் கண்டுவரும் நிலையில், வாரத்தின் முதல் நாள் வர்த்தகம் இன்று காலை தொடங்குகிறது. கடந்த வாரம் வர்த்த நேரம் முடிவில், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 572.91 புள்ளிகள் உயர்ந்து 36,594.33 எனவும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 160.65 புள்ளிகள் உயர்ந்து 10,768 ஆகவும் வர்த்தகம் நிறைவுற்றிருந்தது.
- கவிஞர் வைரமுத்து பிறந்நாள்
தேனி மாவட்டம் வடுகபட்டியில் பிறந்து தங்க தாமரை மலராய், தமிழ் சினிமாவின் கவி பேரரசனாய் வலம் வரும் கவிஞர் வைரமுத்துவுக்கு இன்று 66ஆவது பிறந்தநாள்.
- 1989: அமிர்தலிங்கம், வெற்றிவேலு கொலை
தந்தை செல்வநாயகத்தின் மறைவுக்கு பின்னர் தமிழர் விடுதலை கூட்டணியை வழிநடத்தியவரும், இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகித்த முதலாவது தமிழருமான அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிவேலு யோகேஸ்வரன் ஆகியோர் 1989ஆம் ஆண்டு இதே தினத்தில் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த இரட்டைக் கொலையில் விடுதலைப் புலிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இதையும் படிங்க: அசோக் கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது - சச்சின் பைலட்