தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கவிதா தோல்வியை தாங்க முடியாமல் டிஆர்எஸ் தொண்டர் பலி! - TRS worker dies

ஹைதராபாத்: தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகளான கவிதா மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்ததை தாங்கி கொள்ள முடியாமல் கட்சி தொண்டர் இறந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிஆர்எஸ் தொண்டர் பலி

By

Published : May 27, 2019, 10:53 PM IST

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளான கவிதா நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நிஜமாபாத் தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் அரவிந்த் போட்டியிட்டார். ஆனால் பாஜக வேட்பாளர் அரவிந்திடம் 71ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர். இதைக் கேட்ட நிஜமாபாத் தொகுதியை சேர்ந்த டிஆர்எஸ் கட்சி தொண்டர் ஒருவர் மாரடைப்பால் இறந்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் எம்.பியாக தேர்தெடுக்கப்பட்ட அவர் தொகுதியில் உள்ள அனைத்து ஏரிகளும் தூர்வாரப்பட்டு புனரமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாததால், இந்த தேர்தலில் அவரை எதிர்த்து 178 விவசாயிகள் போட்டியிட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details