தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு இதோ...

NEWS TODAY Etv bharath News Today SSI Pauldurai submarine cable connectivity to Andaman & Nicobar Islands Narendra Modi Atmanirbhar Bharat Saptah Sushant Singh Rajput case Rhea Chakraborty Saket Court Tablighi Jamaat congregation India-China border ITBP sslc results எஸ்.எஸ்.எல்.சி. முடிவுகள் வெளியீடு எஸ்.எஸ்.ஐ. பால்துரை மரணம் ஆத்மனிர்பர் பாரத் சப்தா திட்டம் தொடக்கம் நடிகை ரியாவிடம் விசாரணை டெல்லி சமய மாநாடு வழக்கு இந்திய சீன எல்லையில் ஆய்வு இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பொது இயக்குனர் சுர்ஜித் தேஸ்வால் கண்ணாடி இழை திட்டம் தொடக்கம்

By

Published : Aug 10, 2020, 7:30 AM IST

  1. கண்ணாடி இழை திட்டம் தொடக்கம்:சென்னை- அந்தோமான் நிக்கோபார் தீவுகள் இடையே கடல் வழி கண்ணாடி இழை கேபிள் இணைப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார். இதன்மூலம், அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அதிவிரைவு பிராட்பேண்ட் தொலைத்தொடர்பு வசதி கிடைக்கும்.
    பிரதமர் நரேந்திரமோடி
  2. எஸ்.எஸ்.எல்.சி. முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.
    இன்று தேர்வு முடிவு
  3. எஸ்.எஸ்.ஐ. பால்துரை மரணம்: சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை-மகன் காவல் நிலையத்தில் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 காவலர்களுள் ஒருவரான எஸ்.எஸ்.ஐ. பால்துரை கரோனா சிகிச்சை பலனின்றி இன்று மரணித்தார். இது தொடர்பாக நீதிபதி விசாரணை நடத்துகிறார்.
    எஸ்.எஸ்.ஐ. பால்துரை
  4. ஆத்மனிர்பர் பாரத் சப்தா திட்டம் தொடக்கம்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று 'ஆத்மனிர்பர் பாரத் சப்தா' திட்டத்தை இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கிவைக்கிறார்.
    பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
  5. நடிகை ரியாவிடம் விசாரணை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் உயிரிழப்பு தொடர்பாக நடிகை ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஆகியோரிடம் அமலாக்கத்துறை அலுவலர்கள் இன்றும் விசாரணை நடத்துகின்றனர்.
    சுஷாந்த் சிங் வழக்கு
  6. டெல்லி சமய மாநாடு வழக்கு:டெல்லி சமய மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டினர் 46 பேர் மீதான வழக்கின் விசாரணை சாகேத் நீதிமன்றத்தில் இன்று நடக்கிறது. இந்த 46 பேரும் தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
    டெல்லி சமய மாநாடு
  7. இந்திய சீன எல்லையில் ஆய்வு: இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பொது இயக்குனர் சுர்ஜித் தேஸ்வால் இந்திய- சீன எல்லையில் இன்று ஆய்வு நடத்துகிறார்.
    ஐடிபிபி

ABOUT THE AUTHOR

...view details