- முதலமைச்சர் டெல்லி பயணம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் சென்னையிலிருந்து டெல்லி செல்கிறார். ஜன.19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கிறார்.
- மாணவர்களுடன் கல்வி அமைச்சர் கலந்துரையாடல்: கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்புக்கு மத்தியில் கல்வியில் கவனம் செலுத்துவது, புதிய தொழிற்நுட்பங்களை கையாள்வது குறித்து கேந்திர வித்யாலயா மாணவர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று (திங்கள்கிழமை) காணொலி வாயிலாக கலந்துரையாடுகிறார்.
- சமக ஆலோசனைக் கூட்டம்: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அனைத்து மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கட்சியின் தலைவர் ரா. சரத்குமார், மகளிரணி செயலாளர் ராதிகா சரத்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
- புதுச்சேரி சட்டப்பேரவை கூடுகிறது: சட்டப்பேரவை ஆறு மாதத்துக்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டும் என்ற சட்டவிதியின்படி புதுச்சேரி சட்டப்பேரவை திங்கள்கிழமை (ஜன.18) கூடுகிறது. சென்ற முறை ஜூலை மாதம் 20ஆம் முதல் 25ஆம் வரை தேதி வரை புதுச்சேரி சட்டப்பேரவை கூடியிருந்தது என்பது நினைவுக் கூரத்தக்கது.
- டெல்லியில் குளிர் இன்றும் நீடிக்கும்: டெல்லியில் கடும் குளிரும், பனிமூட்டமும் மக்களை வாட்டி வதைத்துவரும் நிலையில் இன்றும் பனிமூட்டம், குளிர் வானிலை தொடரும் என தேசிய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் நேற்று ரயில்கள் தாமதமாகின.
- பாமக நிறுவனர் ராமதாஸின் சகோதரர் காலமானார்: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் இளைய சகோதரர் சீனிவாசன் என்ற சீனுக்கவுண்டர் உடல்நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று காலை திண்டிவனத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.
- வைகை அணை திறப்பு: வைகை அணை 13 ஆண்டுகளுக்கு பிறகு முழுக் கொள்ளவை எட்டியது. இதையடுத்து இன்று அதிகாலை 6 மணிக்கு, மின்நிலையம், தடுப்பணைக் கால்வாய், 58ஆம் கால்வாய் மற்றும் ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.
- வெற்றி முனைப்பில் இங்கிலாந்து: இலங்கையில் நடைபெறும் முதலாவது டெஸ்டின் 5ஆவது நாள் ஆட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இங்கிலாந்து வெற்றி பெற 36 ரன்கள் மட்டுமே தேவை.
- சாலை விழிப்புணர்வு வாரம்: பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை அறிவுறுத்தவும், சாலை பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாத காலம் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படும். அதன்படி இன்று (ஜன.18) முதல் இந்த நிகழ்வு நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கடைபிடிக்கப்படுகிறது.
- வானிலை அறிக்கை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (ஜன.18) முதல் வருகிற 20ஆம் தேதி வரை வடவானிலையை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- பிரிட்டன் எல்லைகள் மூடல்: புதிய வகை உருமாறிய கரோனா வைரஸை எதிர்கொள்ளும் வகையில் பிரிட்டனில் ஜன.18ஆம் தேதி முதல் அந்நாட்டின் எல்லைகள் மூடப்படுகின்றன.
- பாகிஸ்தானில் பள்ளிகள் திறப்பு: கரோனா தொற்று பாதிப்புக்கு மத்தியில் பாகிஸ்தானில் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.
இன்றைய செய்திகள்- நிகழ்வுகளின் தாெகுப்பு
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகளை சுருக்கமாக இங்கு பார்க்கலாம்.
Important events to look for today Important events to look for today News Today இன்றைய நிகழ்வுகள் ரமேஷ் பொக்ரியால் எடப்பாடி பழனிசாமி புதுச்சேரி சட்டப்பேரவை வைகை அணை திறப்பு பிரிட்டன் எல்லைகள் மூடல் ராமதாஸின் சகோதரர் காலமானார் சீனிவாசன் என்ற சீனுக்கவுண்டர் இன்றைய செய்திகள் இன்றைய முக்கிய நிகழ்வுகள்