ஜம்மு காஷ்மீர், லடாக் மாநிலங்களின் அமைதி, சூழல், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து 370ஆவது பிரிவை ரத்து செய்தது உள்ளிட்டவைகளை வலியுறுத்தி கல்லூரியில் நடைபெற்ற மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் கருத்தரங்க நிகழ்வின்போது ஜேஎன்யு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈடிவி பாரத் நிருபரைத் தாக்கிய ஜேஎன்யு மாணவர்கள் - ஈடிவி பாரத் நிருபரை தாக்கிய ஜேஎன்யு மாணவர்கள்
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்தை எதிர்த்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஜேஎன்யு மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்த நிலையில் சில மாணவர்கள் செய்தி சேகரிக்கச் சென்ற ஈடிவி பாரத் நிருபரைத் தாக்கியுள்ளனர்.
![ஈடிவி பாரத் நிருபரைத் தாக்கிய ஜேஎன்யு மாணவர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4643114-thumbnail-3x2-del.jpg)
ஈடிவி பாரத் நிருபரை ஜேஎன்யு மாணவர்கள் தாக்கும் காட்சி
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து செய்தி சேகரித்த நமது ஈடிவி பாரத் டெல்லி நிருபரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜேஎன்யு மாணவர்கள் தங்களின் கேள்விகளை மட்டும் கேட்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
ஈடிவி பாரத் நிருபரை ஜேஎன்யு மாணவர்கள் தாக்கும் காட்சி
இதற்கு ஈடிவி பாரத் நிருபர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ஜேஎன்யு மாணவர்கள் நிகழ்விடத்திலிருந்து வெளியேறுமாறு நிருபரின் சட்டையை பிடித்து இழுத்து தள்ளியுள்ளனர். சக ஊடகவியாளர்கள் இதில் தலையிட்டு பிரச்னையை கட்டுப்படுத்தினர்.
இதையும் படிங்க: தடை செய்யப்படுகிறதா அஜினோமோட்டோ - அதன் பின்னணி என்ன?