தமிழ்நாட்டில் ஞாயிறு ஊரடங்கு ரத்து
கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் ஞாயிறுதோறும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் மத்திய அரசு வெளியிட்ட அன்லாக் 4.o வழிகாட்டுதல்களின்படி ஞாயிறுதோறும் தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்பட்ட தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் இன்று அனைத்து வகையான கடைகளும் முழுமையாக திறக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் ஞாயிறு ஊரடங்கு ரத்து ஐபிஎல் அட்டவணை இன்று வெளியீடு
நடப்பு ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்படவுள்ளது. கோவிட்-19 காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடர், ஐக்கிய அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஐபிஎல் அட்டவணை இன்று வெளியீடு தமிழ்நாட்டில் இன்று முதல் விரைவு போக்குவரத்து
தமிழ்நாட்டில் இன்று முதல் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. கரோனா பரவலையடுத்து ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் இன்று முதல் விரைவு போக்குவரத்து ஈரான் பாதுகாப்புத் துறை அமைச்சரை சந்திக்கும் ராஜ்நாத் சிங்
ஈரான் சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பிரிகாடியர் ஜெனரல் அமீர் ஹடாமியை சந்தித்து பேசவுள்ளார். இந்தச் சந்திப்பில் இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பு மற்றும் வளைகுடா நாடுகள் நிலைமை குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் பாதுகாப்புத் துறை அமைச்சரை சந்திக்கும் ராஜ்நாத் சிங் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா இன்று தொடங்குகிறது
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 12 நாள்கள் நடைபெறும் ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா இன்று தொடங்குகிறது இன்ஸ்டாகிராமில் தன்னை பின்தொடர்பவர்களுடன் உரையாடும் ரத்தான் டாடா
இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தான் டாடா, இன்ஸ்டாகிராமில் தன்னை பின்தொடர்பவர்களுடன் இன்று மாலை உரையாடுகிறார்.
இன்ஸ்டாகிராமில் தன்னை பின்தொடர்பவர்களுடன் உரையாடும் ரத்தான் டாடா இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இரண்டாவது டி20 போட்டி
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி-20 போட்டி சவுத் ஹேமில்டனில் உள்ள ரோஸ் பவுல் என்று இடத்தில் இன்று நடைபெறுகிறது. முன்னதாக செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இரண்டாவது டி20 போட்டி