தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தாெகுப்பு!#EtvBharatNewsToday - Etv Bharat News Today

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.#EtvBharatNewsToday

Etv Bharat News Today
Etv Bharat News Today

By

Published : Sep 5, 2020, 6:14 AM IST

மத்திய பாதுகாப்புத் துறை தேர்வு எழுதுபவர்களுக்கு சிறப்பு ரயில்கள்:

மத்திய பாதுகாப்புத் துறை தேர்வு எழுதுபவர்களுக்கு கோவையிலிருந்து சென்னை மற்றும் திருநெல்வேலியில் இருந்து மதுரை என இரண்டு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இன்று இயக்கப்படவுள்ளன. கோவையிலிருந்து செல்லும் ரயில் இன்று இரவு 9 மணிக்கும், திருநெல்வேலியிலிருந்து செல்லும் ரயில் நாளை காலை 5.15 மணிக்கும் இயக்கப்படவுள்ளன.

மத்திய பாதுகாப்புத் துறை தேர்வு எழுதுபவர்களுக்கு சிறப்பு ரயில்கள்

47 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது:

இந்தியாவின் முன்னாள் குடியரத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் இன்று. கல்வித் துறையில் அவர் பங்களிப்பை போற்றும் விதமாக இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்று 47 ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நல்லாசிரியர் விருது வழங்கவுள்ளார்.

47 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடக்கம்:

தமிழ்நாட்டில் இருந்து இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. செப்டம்பர் 7ஆம் தேதி முதல் 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடக்கம்

வி திரைப்படம் இன்று முதல்:

பிரபல ஓடிடி தளத்தில் நானி நடிப்பில் உருவாகியுள்ள ‘வி’ திரைப்படம் இன்று முதல் ஸ்ட்ரீம் ஆகிறது. நானியின் 25ஆவது படமான இதற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நானியை அறிமுகம் செய்த இயக்குநர் மோகன கிருஷ்ணா இந்திரகன்டி இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

வி திரைப்படம் இன்று முதல்

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கு நேர்முகத் தேர்வு:

கோவையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு இன்று முதல் நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வானது, ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள சீதாலட்சுமி மகப்பேறு இல்லத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கு நேர்முகத் தேர்வு

ABOUT THE AUTHOR

...view details