தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பண உதவி, பயணத்திற்கு வாகனம்': ராகுல்காந்தி சந்தித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் ஒரு உரையாடல் - ETV Bharat meet migrants who interacted with Rahul Gandhi

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்த நிலையில், அந்த தொழிலாளர்களிடம் ஈடிவி பாரத் செய்தியாளர்கள் களத்தில் நேரடியாகத் தொடர்பு கொண்டு உரையாடினர்.

Migrant
Migrant

By

Published : May 24, 2020, 9:06 PM IST

Updated : May 25, 2020, 2:31 AM IST

கரோனா லாக்டவுன் காரணமாக பெரும்பாதிப்பிற்குள்ளான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ராகுல் காந்தி, நேரடியாகச் சென்று பார்வையிட்டு, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். ராகுல் காந்தியுடன் பேசிய தொழிலாளரான ராஜ்குமார், தனது சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்திற்கு திரும்பிய நிலையில், அவரை ஈடிவி பாரத் செய்தியாளர்கள் தொடர்பு கொண்டு பிரத்யேகமாகப் பேட்டி கண்டனர்.

அந்த அனுபவம் குறித்து புலம்பெயர்ந்த தொழிலாளி ராஜ்குமார் மற்றும் அவரது குழுவினர் பேசுகையில், 'நாங்கள் சொந்த ஊரான ஜான்சிக்கு நடைப்பயணமாக சென்ற போது, திடீரென்று ராகுல் காந்தி எங்களைச் சந்தித்தார். நடைபாதையிலேயே அவர் அமர்ந்துகொண்டு, எங்கள் குறைகளைப் பற்றிக் கேட்டறிந்தார். நாங்கள் எங்கள் நெருக்கடியான நிதிநிலைமை குறித்து ராகுலுக்கு எடுத்துரைத்தோம்.

விவரங்களைத் தெரிவித்ததும், உடனடியாக எங்கள் பயணத்திற்காக வாகனத்தை ஏற்பாடு செய்துகொடுத்தார், ராகுல். மேலும் எங்கள் அடிப்படைத் தேவைக்கான பணவுதவியையும் ராகுல்காந்தி செய்து கொடுத்தார்' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ஜி.எஸ்.டியில் புதிய வரியா? நிதியமைச்சகம் மறுப்பு

Last Updated : May 25, 2020, 2:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details