கர்நாடக மாநிலம் ராய்சூர் மாவட்டம் சிந்துனூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணதேவராய உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தவறான வினாத்தாள்களை வழங்கியதாக ஈடிவி பாரத் புகார் அளித்ததை அடுத்து, மூன்று ஆசிரியர்களை கர்நாடக அரசு புதன்கிழமை (ஜூன்8) இடைநீக்கம் செய்தது.
இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அதே மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுமார், எம் எரன்னா, சுனிதா ஆவார்கள். இது குறித்த வெளியான ஆதாரங்களின்படி, ஜூன் 6 ஆம் தேதி நடைபெற்ற பொதுத்தேர்வில் கணிதத் தாள் தேர்வில் தவறான வினாத்தாள் இந்த ஆசிரியர்களால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.
ஆசிரியர்களின் இந்த அலட்சியம் தொடர்பாக ஈடிவி பாரத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து சம்மந்தப்பட்ட விவகாரத்தை ஈடிவி பாரத் கர்நாடகாவின் பொதுக் கல்வித் துறை துணை இயக்குநரின் பார்வைக்கு கொண்டுசென்றது.