வழிபாட்டு தலங்களுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் வகையில் ரஷ்யாவிலிருந்து எஸ்தர் பக்ரதுணி, அவரது தாயார் ஒலிவியா ஆகியோர் பிப்ரவரி 6ஆம் தேதி இந்தியாவிற்கு வந்துள்ளனர். கரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக அவர்கள் இந்தியாவிலேயே முடங்கி பணம் இல்லாமல் தவித்துவந்துள்ளனர். நமது ஈடிவி பாரத்தில் அவர்களின் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, எஸ்தருக்கு நிதியுதவி கிடைத்துள்ளது.
தான் அனுபவித்த சிரமங்கள் குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய அவர், "இஸ்கான் கோயிலுக்கு செல்வதற்காக பிப்ரவரி 6ஆம் தேதி இந்தியாவிற்கு வந்தோம். ஊரடங்கு விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் சிக்கினோம். தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் இருந்த பணத்தை வைத்து திருமலைக்கு சென்றோம். ஆனால், விதிகளின்படி வெளிநாட்டவரான எங்களை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை.