கர்நாடகா மாநிலம் கல்புர்கி மாவட்டம் சுர்பூர் தாலுகாவை அடுத்துள்ள கோகிகேராவைச் சேர்ந்தவர் குருபாய் (64). இவர், கடந்த 20 ஆண்டுகளாக ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் வெறும் 4.5 சதுர அடியில் கட்டப்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் இருந்த குடிசையில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நமது ஈடிவி பாரத்தின் கவனத்திற்கு இந்த தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து , "இதை நீங்கள் நம்ப முடியாது! ... 4.5 அடிக்குள் 20 ஆண்டுகளாக தங்கியிருக்கும் இந்த பெண்" என்ற தலைப்பில் ஏழ்மை தனிமையில் தவித்துவரும் மூதாட்டி குறித்து நமது ஈடிவி பாரத் செய்தி தளத்தில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 21) செய்தி பதிவிட்டிருந்தோம்.
இது தொடர்பில் தகவல் அறிந்த உள்ளூர் எம்.எல்.ஏ நரசிங்க நாயக்கா ஈடிவி பாரத்தை தொடர்பு கொண்டு வயதான பெண்மணிக்கு வீடு கட்டுவதாக உறுதியளித்தார். மூதாட்டியின் ஏழ்மை நிலைமையை உணர்ந்து, முதல்கட்டமாக அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்கியும் உள்ளார்.
ஈடிவி பாரத் செய்தி எதிரொலி - புதிய வீட்டில் வாழவுள்ள மூதாட்டி! இது தொடர்பில் மூதாட்டி குருபாய் கூறுகையில், “நான் கடந்த 20 ஆண்டுகளாக இங்கு தான் தனியாக தங்கியிருக்கிறேன். வீடு மிகவும் சிறியதாக இருக்கும். எனக்கு அதனை திருத்தி அமைக்க ஆசையாக தான் இருக்கும். ஆனால், அதனை கட்ட என்னிடம் பணமில்லை. ஈடிவி பாரத்தின் முயற்சியால் தற்போது எனக்கு புதிய வீடு வரயிருக்கிறது. எனக்கு ஒரு புதிய வீட்டைப் பெற்று தருவதில் அக்கரைக் காட்டிய அனைவருக்கும் அவர்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.” என புன்னகையுடன் கூறினார்.
இதையும் படிங்க :ஈடிவி பாரத் செய்தி எதிரொலி; காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு