தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சடலங்களை மாற்றி கொடுத்த விவகாரம்: ஈடிவி பாரத் செய்தியால் எய்மஸ் மருத்துவமனை ஊழியர் பணிநீக்கம்

டெல்லி: பிரபல எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள், கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் சடலங்களை வெவ்வேறு குடும்பங்களுக்கு மாற்றி கொடுத்துள்ள சம்பவம் ஈடிவி பாரத் செய்தியால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

delhi
delhi

By

Published : Jul 8, 2020, 9:39 PM IST

Updated : Jul 8, 2020, 11:46 PM IST

டெல்லியில் மிகவும் பிரபலமான எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, மதத்தின் அடிப்படையில் இறுதிசடங்கு நடத்துவதற்காக இருவரின் சடலங்களும் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

aiims-terminate-one-employee-and-suspends-health-official

ஒருவரின் இறுதிச்சடங்கு முடிந்துள்ள நிலையில் தான், சடலங்கள் மாறியுள்ள அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இருவரும் வெவ்வேறு மதத்தினர் என்பதால் குடும்பத்தின் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இருப்பினும் இதுதொடர்பாக வெளியே சொல்லக்கூடாது எனவும் பாதுகாப்பு காவலர்கள் குடும்பத்தினரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து உயிரிழந்த இஸ்லாமிய பெண்ணின் சகோதரர் கூறுகையில், " எனது சகோதரி இரவு 11 மணியளவில் உயிரிழந்துள்ளார். ஆனால்,எங்களுக்கு 2 மணியளவில் தான் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக மயானத்திற்கு செல்லுங்கள் அங்கு வைத்துதான் சடலங்களை ஒப்படைப்போம் என கூறினார்கள். நான் முகத்தை மட்டும் பார்க்க அனுமதி கேட்டேன் ஆனால் மறுத்துவிட்டார்கள். இதையடுத்து மயானத்தில் புதைப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் சகோதரியின் முகத்தை மட்டும் பார்த்துவிடுகிறேன் என அனுமதி கேட்டுவிட்டு பார்த்தபோது தான் சடலங்கள் மாறியுள்ளது தெரியவந்தது" என்றார்

இந்தச் செய்தி நமது ஈடிவி பாரத் தளத்தில் வெளியானதை தொடர்ந்து, மால்வியா நகர் எம்.எல்.ஏ சோம்நாத் பாரதி இவ்விவகாரம் குறித்து உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கலந்துரையாடியுள்ளார்.

இதுகுறித்து எம்எல்ஏ பாரதி கூறுகையில், " நான் எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியாவை தொடர்பு கொண்டு பேசினேன். ஆனால் அவர் இச்சம்பவம் தொடர்பாக பேச மறுத்துவிட்டார். பின்னர் நான் வேறு சில அலுவலர்களிடம் பேசினேன்.

முன்னதாக, அவர்கள் தங்கள் மருத்துவமனையில் இதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை என மறுப்பு தெரிவித்த நிலையில், பின்னர் எய்ம்ஸ் நிர்வாகம் அத்தகைய அலட்சியத்தை ஏற்றுக்கொண்டனர்.

ஒரு பெண்மணி வேறு மத வழக்கப்படி புதைக்கப்பட்ட சம்பவம் வெட்கக்கேடானது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அலுவலர்கள் மீது புகார் அளித்து கடுமையான தண்டனையை அனுபவிப்பதை உறுதி செய்வேன்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், எய்மஸ் மருத்துவமனை நிர்வாகம், ஒரு ஊழியரை பணிநீக்கம் செய்தது மட்டுமின்றி, இந்த வழக்கில் தொடர்புடைய சுகாதார அலுவலரை இடைநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jul 8, 2020, 11:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details