தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அத்தியாவசியப் பொருட்கள் வீட்டிற்கே வந்துவிடும்....கவலை வேண்டாம்: உ.பி முதலமைச்சர்

லக்னோ: அத்தியாவசியப் பொருட்களை வாங்கக்கூட மக்கள் வெளியே வரவேண்டாம், அவை வீட்டிற்கே வந்து கொடுக்கப்படும் என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் யோகி ஆதித்யாநாத்
முதல்வர் யோகி ஆதித்யாநாத்

By

Published : Mar 25, 2020, 10:24 AM IST

இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பித்து நேற்றிரவு உத்தரவிட்டார். இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக ஒவ்வொரு மாநில முதலமைச்சரும் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முடுக்கிவிட்டனர்.

இந்நிலையில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மக்களை அவசியமில்லாமல் வெளியே வரவேண்டாம் எனவும், காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் வீட்டிற்கே வந்து கொடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இதற்காக, காவல் துறையினர் உதவியுடன் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மக்கள் கரோனா குறித்து அஞ்ச வேண்டாம், சுகாதாரத்தினை மேம்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவு எதிரொலி - சபரிமலை கோயில் திருவிழா ரத்து!

ABOUT THE AUTHOR

...view details