சீனாவுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக டெல்லியை அடுத்துள்ள பிதாம்புராவைச் சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளர் ராஜீவ் ஷர்மாவை (61) டெல்லி காவல்துறையினர் கடந்த செப்.14ஆம் தேதி கைது செய்தனர்.
பிதாம்புரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில், மின்னாக்கம் செய்யப்பட்ட இந்திய பாதுகாப்பு தொடர்பான சில ரகசிய ஆவணங்கள், கோப்புகள், மடிக்கணினி ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், அவருடன் இணைந்து பணியாற்றிவந்த சீனாவைச் சேர்ந்த கிங் ஷி, நேபாளைச் சேர்ந்த ஷெர் சிங் ஆகியோரையும் டெல்லி சிறப்பு காவல்துறை கைது செய்துள்ளது.
இந்தியாவின் பாதுகாப்புத் துறை சார்ந்த ரகசியத் தகவல்களை சீனாவுக்கு பணத்திற்காக அளித்துவந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர்கள் மூவர் மீதும் அதிகாரப்பூர்வ ரகசியங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் மூவரையும் நீதிமன்றக் காவலில் எடுத்து, விசாரணை மேற்கொள்ள காவல்துறையினருக்கு தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக டெல்லி இணை காவல் ஆணையர் சஞ்சீவ் யாதவ் கூறுகையில், "இந்தியாவின் பாதுகாப்புத் துறைச் சார்ந்த ரகசியத் தகவல்களை திருடிய ராஜீவ் ஷர்மா, கிங் மற்றும் ஷெர் சிங் ஆகியோரின் மூலமாக சீன உளவுத்துறையினருக்கும் அனுப்பி வந்துள்ளார்.