ஹைதராபாத் (தெலங்கானா): உலக நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், கோவிட்-19 தடுப்பூசி தயாரிப்புப் பணியில் ஈடுப்பட்டுவரும் நிறுவனங்களை பார்வையிட வருகின்றனர்.
கோவிட்-19 தடுப்பூசி நிறுவனங்களை பார்வையிட வரும் வெளிநாட்டு தூதர்கள்! - பயாலாஜிகல் ஈ லிமிட்
ஹைதராபாத்தில் உள்ள கோவிட்-19 தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களான பயாலாஜிக்கல் ஈ லிமிட், பாரத் பயோடெக் ஆகியவற்றை பார்வையிட 80 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் டிசம்பர் 9ஆம் தேதி வருகை தரவுள்ளனர்.
Envoys to visit COVID 19 vaccine firms
டிசம்பர் 9ஆம் தேதி அன்று, பயாலாஜிக்கல் ஈ லிமிட், பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களை 80 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் மருத்துவ குழுவினருடன் பார்வையிடுகின்றனர்.
தலைமைச் செயலாளர் சோமேஷ்குமார் இந்த நிகழ்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தூதர்கள் பார்வையிடும் டிசம்பர் 9ஆம் தேதியன்று, தக்க ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.