தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பயணம் - காஷ்மீரில் இறுக்கம் தளர்கிறதா? - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்

ஸ்ரீ நகர்: சிறப்பு அஸ்தஸ்து நீக்கத்துக்குப்பின் ஜம்மு காஷ்மீரிலுள்ள இறுக்கமான சூழல் தளர்த்தப்படவுள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Jammu Kashmir
Jammu Kashmir

By

Published : Jan 9, 2020, 8:08 PM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய 370 சட்டப்பிரிவை கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசால் நீக்கப்பட்டது. மாநில அந்தஸ்தை நீக்கி யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

காஷ்மீரில் அடக்குமுறை ஆட்சி நிலவிவருவதாகவும், மனித உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுவரும் நிலையில், தற்போது அமெரிக்கா, நார்வே, பின்லாந்து, வங்கதேசம், வியட்நாம், மாலத்தீவு, நைஜீரியா உள்ளிட்ட 16 நாட்டு பிரதிநிதிகள் காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

காஷ்மீரின் கள நிலவரம் குறித்து அவர்கள் ஆய்வுசெய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு 5 மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் கட்டுப்பாடுகளில் தற்போது தளர்வுகளை அரசு மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

ஆலோசனையில் ஈடுபடும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள்

அதன் தொடக்கமாகவே இந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் பயணம் உள்ளதாக அரசு வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மெல்ல மெல்ல ராணுவக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இயல்பு நிலைக்கு காஷ்மீர் பகுதியைக் கொண்டுவரவுள்ளதாக பாதுகாப்புத் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஐஎஸ் பயங்கரவாதி டெல்லியில் கைது !

ABOUT THE AUTHOR

...view details