ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புத்தகுதி கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
மக்களும் அவதிக்குள்ளானார்கள். மேலும் ஆங்காங்கே போராட்டங்களும் நடந்தன. வீட்டுக் காவலிலுள்ள காஷ்மீர் தலைவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் வழக்குத் தொடரப்பட்டது.
இதற்கிடையில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜம்மு காஷ்மீருக்கு பயணம்செய்து மாநிலத்தின் நிலை குறித்து ஆய்வுநடத்தினர். இது கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் நடந்தது. தற்போது லத்தீன் அமெரிக்கா, நார்வே உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் கொண்ட தூதர்கள் 16 பேரும் ஜம்மு காஷ்மீர் யூனியனுக்கு இரண்டு நாள்கள் பயணமாகச் சென்றுள்ளனர்.
16 நாட்டு தூதர்கள் காஷ்மீர் பயணம் இவர்கள் ஜம்மு காஷ்மீர் யூனியனில் நிலவும் பிரச்னை குறித்து ஆய்வு நடத்தவுள்ளனர். மேலும் துணைநிலை ஆளுநர் ஜி.சி. முர்மு, இதர உறுப்பினர்களையும் சந்திக்கின்றனர். இந்தக் குழுவில் அமெரிக்கா, நார்வே தவிர வங்கதேசம், வியட்நாம், மாலத்தீவு, தென்கொரியா, மொராக்கோ, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளின் தூதர்களும் உள்ளனர்.
இதையும் படிங்க: அமெரிக்க, நார்வே தூதுக்குழு ஜம்மு காஷ்மீர் பயணம்! - சிறப்புக் கட்டுரை