தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிகிச்சைக்கு சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர்! - பாலியல் தொல்லை கொடுத்த மருத்தவர்

திருவனந்தபுரம்: காது வலி சிகிச்சைப் பெற மருத்துவமனைக்கு சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

woman patient
woman patient

By

Published : Jul 4, 2020, 8:17 PM IST

Updated : Jul 4, 2020, 9:44 PM IST

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்ட ஸ்ரீகண்டபுரத்தில் அமைந்துள்ள தனியார் கிளினிக் ஒன்றிற்கு காது வலி சிகிச்சை எடுத்துக் கொள்ள இளம்பெண் ஒருவர் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த கிளினிக் ஈஎன்டி மருத்துவர் பிரசாந்த் நாயகிற்கு சொந்தமானது.

இவர், அந்த பெண்ணுக்கு காது வலி மருந்து கொடுத்த பின்னர், மேற்கொண்டு சோதனைகள் உள்ளதெனக் கூறி அப்பெண்ணைக் காத்திருக்கச் சொன்னதாகக் கூறப்படுகிறது. கிளினிக்கிற்கு வந்த அனைவரும் அங்கிருந்து வெளியேறியதும், மருத்துவர் பிரசாந்த அந்த பெண்ணை தனது அறைக்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது.

அந்த அறையிலிருந்த பெண் மருத்துவ உதவியாளர் வேறொரு அறைக்கு சென்ற நேரம், சிகிச்சைப் பெற வந்த பெண்ணிடம் பிரசாந்த் முறை தவறி நடந்து கொண்டுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் அங்கிருந்து வெளியேறிய பின்னர் காவல்துறையில் புகாரளித்துள்ளார்.

இது குறித்து காவல்துறையினர், மருத்துவர் பிரசாந்திடம் மேற்கொண்ட விசாரணையில், பிரசாந்த் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரசாந்த் கூறுகையில், ”அந்த பெண்ணும், அவருடைய கணவரும் என் கிளினிக்கிற்கு வந்து பிரச்னையில் ஈடுபட்டனர். அப்போதே நான் அவர்களை எச்சரித்தேன். என்னுடைய பணிக்கு இடையூறு விளைவிப்பதாக உங்கள் மீது காவல்துறையினரிடம் புகாரளிப்பேன்” என்றார்.

பல ஆண்டுகளுக்கு முன்பாக பெங்களூருவிலிருந்து கேரளாவிற்கு வந்துள்ளார், டாக்டர் பிரசாந்த். ஏற்கனவே இவர் மீது ஒரு பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்தது உள்பட 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க |பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடம்

Last Updated : Jul 4, 2020, 9:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details