டெல்லி: கரோனா பாதித்த நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பது குறித்தும் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் உடல்களை முறையாகக் கையாள்வது தொடர்பாகவும் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற வழக்கு இன்று (ஜூன் 19) விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அசோக் பூஷன், கரோனா பரிசோதனைக்கு ஏற்புடைய கட்டணத்தை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான கட்டண முறை அமல்படுத்த வேண்டும். அனைத்து கரோனா சிறப்புப் பிரிவிலும் கண்காணிப்புப் படக்கருவி பொருத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
கரோனா எதிரொலி சரிந்த சீன பொருளாதாரம்!
கரோனா நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று மரணம் அடையும் நபர்களின் உடல்களை உடனடியாக அங்கிருந்து அகற்றுங்கள். கரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு நிபுணர் குழுவினர் அவ்வப்போது ஆய்வு நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி குமார் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘கரோனா நோயாளிகள் மோசமாக நடத்தப்படுவது வேதனை அளிக்கிறது. இறக்கும் போது கண்ணியமான முறையில் இறப்பது ஒருவரின் அடிப்படை உரிமை.
உயிரிழந்தவர்களின் உடல்கள், உரிய மரியாதை அளிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட வேண்டும் அல்லது தகனம் செய்யப்பட வேண்டும். இந்த விவகாரம் குறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.
சீனாவின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது' : பாதுகாப்பு நிபுணர் கருத்து
இதையடுத்து, இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷன், நீதிபதிகள் எஸ்.கே. கவுல்ஆகியோர் கொண்ட அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள் மோசமாக நடத்தப்படுவது குறித்தும், கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் மரியாதைக் குறைவாக கையாளப்படுவது குறித்தும் நீதிபதிகள் காட்டமாகக் கேள்வி எழுப்பியிருந்தனர்.
கரோனா பிரிவில் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளனர். கரோனா பிரிவில் நோயாளிகளுக்கு மத்தியில், கரோனா பாதித்து மரணம் அடைபவர்களின் உடல்களும் மூடப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் காணொளிகளும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.