தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

களப் பணியாளர்களின் பாதுகாப்புக்காக நோடல் அலுவலர்களை நியமனம் செய்யுங்கள் - மத்திய உள்துறை அமைச்சகம்

டெல்லி: கரோனாவுக்கு எதிரான களப் பணியாளர்களின் பாதுகாப்புக்காக நோடல் அலுவலர்களை மாநில அரசு நியமிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

டெல்லி
டெல்லி

By

Published : Apr 23, 2020, 11:34 AM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் மருத்துவர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட துறையைச் சேர்ந்த அலுவலர்கள் அயராது உழைத்து வருகின்றனர். சமீப காலமாக களப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாகவும், பாதுகாப்பில் குறை இருப்பதாகவும், மருத்துவர்களின் இறுதிச் சடங்களில் பல எதிர்ப்புகள் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் மத்திய உள்துறை செயலர் அஜய் குமார் பல்லா ஏழுதிய கடிதத்தில், "கரோனா தொற்றால் இறந்ததாக சந்தேகிக்கப்படும் மருத்துவ நிபுணர்களின் குடும்பத்தினர், உறவினர்களின் இறுதிச் சடங்குகளை செய்யவிடாமல் நாட்டின் பல இடங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். களப் பணியாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.

மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நோடல் அலுவலர்கள் (Nodal officers) நியமித்து, மருத்துவ நிபுணர்களின் செயல்பாட்டில் எந்தவொரு பாதுகாப்பு பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எதேனும் பிரச்னை நிகழ்ந்தால் நோடல் அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க:இஸ்லாமியரிடமிருந்து பொருள் வாங்க மறுத்தவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details