இதுதொடர்பாக முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், "சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள சூழலில், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை மேற்கு வங்க அரசு உறுதி செய்ய வேண்டும்.
ஒருவேளை இவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் பட்சத்தில் சுகாதாரத்துறையே சீர்குலையும் அபாயத்தில் உள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளின் மூலம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் குறிப்பிடத் தரநிலையைப் பின்பற்றி கூடுதலாகப் பரிசோதனை மையங்களைத் திறக்க வேண்டும்.
மேற்கு வங்க அரசு அமைத்துள்ள நிபுணர்கள் குழுக்களில் நுண்ணுயிரியல், தொற்றுநோய், நுரையீரல், சுகாதாரம் ஆகியத் துறைகளின் நிபுணர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.