இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளில் இனி மத்திய மருத்துவக்கழகம் தான் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்தும் என்ற நடைமுறை ஏற்பட்டிருப்பதால், புதுச்சேரி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து என்று சமூகவலைதளங்களில் சிலர் அவதூறு பரப்பி வருகிறார்கள்.
200 மருத்துவ இடங்களை கொண்ட ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் புதுச்சேரி மாணவர்களுக்கான 54 இடங்களுக்கான இட ஒதுக்கீடு கட்டாயம் கிடைக்கும். இது பற்றி அச்சப்படத் தேவையில்லை, தவறான வதந்திகளை நம்பவேண்டாம். இதுகுறித்து ஜிப்மர் நிர்வாகம் மற்றும் மத்திய மருத்துவக் கவுன்சிலிடமும் விசாரித்து உறுதி செய்யப்பட்டுள்ளது.