ஹைதராபாத்தைச் சேர்ந்த ராவ், பொறியாளர் படிப்பை முடித்துவிட்டு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றியவர். சுமாராக ஒரு லட்சத்துக்கும் மேலாக ஊதியம் பெற்ற இவர் அதையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு தெரு குழந்தைகள், பார்வையற்றவர்கள், வயதானவர்களுக்கு இசை கற்பிக்கத் தொடங்கினார். லட்சங்களில் வராத மனதிருப்தி இது போல இசையைக் கற்பிக்கும்போதுதான் ஏற்படுகிறது என மெல்லியதாக புன்னகைக்கவும் செய்கிறார்.
இவரிடம் புல்லாங்குழல் மற்றும் கீபோர்டு வாசிக்க பயிற்சி எடுக்க ரூ.1 மட்டும்தான் கட்டணம்.
தற்போது, ஷேஷாத்ரிபுரம் கல்லூரி, கப்பன் பூங்கா, ஜே.பி.நகர், நகரின் பல்வேறு இடங்களில் இசை வகுப்புகள் எடுக்கிறார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இவருக்கு மாணவர்கள் உள்ளனர்.
தனது வாழ்க்கையை இசைக்காக அர்ப்பணித்துள்ள இவருக்கு அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் பரிசளித்து கௌரவித்துள்ளன. பல நிறுவனங்களும் இவரையும், இவரது சேவையையும் பாராட்டி வேலை கொடுக்கத் தயாராக இருந்தபோதும் இவரை அதை உதறித் தள்ளிவிட்டார். பார்வை திறனற்ற இவரது மகள்தான் ராவிற்கு உத்வேகம் அளிக்கும் நபர்.
60 வயதான இவர் நாடு முழுவதும் இசையைக் கொண்டு சேர்க்க விருப்பப்படுகிறார்.
ஒரு ரூபாய் இருக்கா? வாங்க மியூசிக் கிளாஸ் உங்களுக்காக... இசை தியானத்தின் இன்னொரு வடிவம். ஸ்வச் பாரத் போல, இசை பாரத்தாக முழு நாடும் மாற வேண்டும் என்கிறார் ராவ். சமூகத்தில் கண்டுக்கொள்ளப்படாமல் இருக்கும் பலவீனமான பிரிவினருக்கு சேவை செய்வதோடு, தனது வாழ்க்கையையும், அவர் சம்பாதிக்கும் அனைத்து செல்வத்தையும் பார்வையற்ற குழந்தைகளின் நலனுக்காக செலவிடுவதாகவும் தெரிவிக்கிறார்.
இதையும் படிங்க:ஆணிப்படுக்கையின் மேல் நின்று பறை இசைத்து இளம் பெண் கின்னஸ் சாதனை!