மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் உதவியாளரான மறைந்த இக்பால் மிர்ச்சியின் சொத்துக்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டார். இதனால் நேற்று அவரை மும்பையிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து அலுவலர்கள் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
என்சிபி மூத்த தலைவரிடம் அமலாக்கத்துறை 12 மணி நேரம் விசாரணை
மும்பை: தாவூத் இப்ராஹிமின் உதவியாளரான மறைந்த இக்பால் மிர்ச்சியின் சொத்துக்களில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் பட்டேலிடம் அமலாக்கத்துறை அலுவலர்கள் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
Prabul Patel
இதில் அவரிடம் 50 கேள்விகள் கேட்கப்பட்டன. விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பட்டேல், "நான் எந்த தவறும் செய்யவில்லை, அனைத்தும் சட்டப்படியே நடைபெற்றிருக்கிறது. அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் முறையாக பதிலளித்துள்ளேன். என்றார். மேலும் இதுகுறித்து அமலாக்கத்துறை தரப்பில், பட்டேல் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிங்க: மகாராஷ்டிராவில் 24ஆம் தேதியே தீபாவளி: உள்துறை அமைச்சர் அமித் ஷா