கடந்த சில நாள்களுக்கு முன்பு வீசிய ஆம்பன் புயல் மேற்கு வங்கத்தையே புரட்டிப்போட்டு விட்டது. புயல் சேதத்தைப் பார்வையிட பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மம்தா அழைப்பு விடுத்தைத் தெடார்ந்து புயல் சேதங்களை அவர் வந்து பார்வையிட்டார்.
பின்னர் புயல் நிவாரண நிதியாக ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குவதாக அறிவித்தார். மேலும், புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில் மேற்கு வங்க ஆளுநர் ஜெக்தீப் தங்கர், மாநிலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய செயல்பாடுகள் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், "மின்சாரம், நீர், அத்தியாவசிய தேவைகள் அவசரமாக மக்களுக்கு கிடைக்கச் செய்யவேண்டும். குறைகூறும் அரசியலை விட்டுவிட்டு நிவாரணத்தில் ஈடுபடவேண்டும். களத்திலுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது முக்கியமாக உள்ளது. நிலைமை மோசமாகவுள்ள கிராமப்புறங்களில் கவனம் செலுத்தப்படவேண்டும். மோசமான நிலையிலுள்ள கிராமங்களைப் புறக்கணிக்க முடியாது. அரசியலமைப்பில் தனக்குள்ள அதிகாரத்தின் கீழ் நிலைமை குறித்து எனக்கு மம்தா அவ்வப்போது தெரிவிக்க வேண்டும்.
புயலுக்கு முன் அரசியல் விளையாட்டை விடுத்துவிட்டு சரியான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால், இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டிருக்காது. ஆளுநர் அலுவலகத்துடன் மம்தா தொடர்பிலிருந்திருந்தால் மூன்று நாள்களுக்கு முன்னரே மீட்புப் பணியில் ஈடுபட ராணுவம் அழைக்கப்பட்டிருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களை நிறுவியவர் நேரு - ராகுல் காந்தி புகழாரம்