ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியின் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதையடுத்து, இந்திய பாதுகாப்புப் படையினரும், காஷ்மீர் பகுதி காவல் துறையினரும் இணைந்து பாகிஸ்தானின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்துவருகின்றனர்.
இதனால், எல்லைப் பகுதி பரபரப்பாகக் காணப்படுகிறது. நேற்று மதியம் 2.30 மணிக்கு சுந்தர்பனி எல்லைப் பகுதியில் சிறிய அளவிலான துப்பாக்கிச்சண்டை தொடங்கியது.
எல்லையில் ஒலிக்கும் துப்பாக்கிச் சத்தம் ஜம்மு காஷ்மீரின் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப்பகுதியில் இந்தாண்டு ஜூன் வரை இரண்டாயிரத்து 27 எல்லைமீறல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இதையும் படிங்க: லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு: பெண்ணை காவலில் எடுத்து விசாரிக்கும் என்ஐஏ!