ஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்காம் மாவட்டத்தில் அம்மாநில காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள அரிபாக் மோச்வா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்தது தெரிவந்தது. அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டு கொல்லப்பட்டனர்.
தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டதாகக் கூறிய காவல்துறையினர், அவர்களிடம் இருந்த துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிப்பொருள்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.