ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள சின்கம் பகுதியில் இன்று(அக்.10) அதிகாலை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. அங்கு வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்ட ராணுவம், காவல் துறையினர் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்தினர்.
இதையடுத்து இருதரப்புக்கும் தீவிரமான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பயங்கரவாதிகள் இருவரும் சுட்டு கொல்லப்பட்டனர். அங்கிருந்து பயங்கர ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் உடல் உடற்கூராய்வுக்காக கொண்டு செல்லப்பட்டு அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.