தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புல்வாமாவில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சூடு

ஸ்ரீநகர்: புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடந்தது.

Encounter  Security forces  Militants  Pulwama  Jammu and Kashmir  புல்வாமா என்கவுன்ட்டர்  பயங்கரவாதிகள் தாக்குதல்  ஜம்மு காஷ்மீர்
Encounter Security forces Militants Pulwama Jammu and Kashmir புல்வாமா என்கவுன்ட்டர் பயங்கரவாதிகள் தாக்குதல் ஜம்மு காஷ்மீர்

By

Published : Jun 18, 2020, 7:56 AM IST

Updated : Jun 18, 2020, 8:51 AM IST

ஜம்மு காஷ்மீர் யூனியன் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய உளவுத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் பம்போரி மீஜ் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது அந்தப் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினர் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டை தொடர்கிறது.

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை நடத்திய பல்வேறு என்கவுன்ட்டர் தாக்குதல்களில் 68 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர். அதில் 35 பேர் ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் ஆவார்கள்.

இதையும் படிங்க: 'அமைதியின் மொழி புரியவில்லை என்றால், உணரும் வகையில் இந்தியா பதிலடி கொடுக்கும்'

Last Updated : Jun 18, 2020, 8:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details