தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாரமுல்லாவில் பயங்கரவாதிகள் - பாதுகாப்புப்படையினர் இடையே மோதல்! - ஜம்மு-காஷ்மீர்

ஸ்ரீநகர் : பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் திடீர் சோதனையின்போது பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் ராணுவ அலுவலர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

பாரமுல்லாவில் தீவிரவாதிகள் பாதுகாப்புப்படையினர் இடையே எழுந்த மோதல்!
பாரமுல்லாவில் தீவிரவாதிகள் பாதுகாப்புப்படையினர் இடையே எழுந்த மோதல்!

By

Published : Sep 4, 2020, 2:39 PM IST

Updated : Sep 4, 2020, 2:48 PM IST

வடக்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தின் பட்டன் பகுதியை அடுத்துள்ள எடிபோராவில் பிரிவினைவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவ உளவுத்துறை அளித்த தகவலை அடுத்து அப்பகுதியில் திடீர் சுற்றி வளைப்பு சோதனையை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டனர்.

இதை எதிர்பாராத பிரிவினைவாதிகள் படைகளின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். பின்னர் இந்த தேடல் நடவடிக்கை இருதரப்பு மோதலாக மாறியது. துப்பாக்கிச் சூட்டில் ராணுவ அலுவலர் ஒருவர் படு காயமடைந்துள்ளதாகவும், 92 வீரர்கள் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

பாரமுல்லாவில் தீவிரவாதிகள் பாதுகாப்புப்படையினர் இடையே எழுந்த மோதல்!

நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு கூடுதல் படைகள் அப்பகுதிக்கு விரைந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது பதற்றமான அப்பகுதி முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பெரிய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் ராணுவத்தால் மீட்கப்பட்டன குறிப்பிடத்தக்கது.

Last Updated : Sep 4, 2020, 2:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details