பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு! - பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாகிச்சூடு
08:56 October 12
காஷ்மீர்: ஸ்ரீநகர் ராம்பஹ்வில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று (அக்.12) காலை துப்பாகிச்சூடு நடைப்பெற்றது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் உலாவிவருவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து இன்று (அக். 12) அதிகாலை முதல் ஸ்ரீநகர் பார்சுலாவில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது, காலை 7.45 மணிக்கு பாதுகாப்பு படையினருக்கும், பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைப்பெற்றது. இந்தச் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க...மீண்டும் முழு பலத்துடன் செயல்படும் உச்ச நீதிமன்றம்!