ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று காலை (ஆக.22) பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதி ஒருவருக்குமிடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த மோதலில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் கிரேரி அருகேவுள்ள செக்-இ-சலூசா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இத்தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.