தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மூளைக் காய்ச்சல்... 8 குழந்தைகள் இறப்பு - மூளைக் காய்ச்சல்

பாட்னா: பீகார் மாநிலத்தில் மூளைக் காய்ச்சலால் மேலும் எட்டு குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Encephalitis

By

Published : Jun 23, 2019, 6:22 PM IST

பீகார் மாநிலத்தில் சமஸ்திபூர் சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளில் எட்டு பேர் ஏஇஎஸ் (அக்யூட் என்சிபலிட்டிஸ் சின்ட்ரோம்) எனப்படும் மூளைக் காய்ச்சல் நோயால் உயிரிழந்துள்ளனர் என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

சமஸ்திபூர் சதார் மருத்துவமனைக்கு வரும் அனைத்து குழந்தைகளையும் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து தனியாக சிகிச்சை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் அம்மருத்துவமனையில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என தனிப்பிரிவு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து மருத்துவமனைக்கு மூளைக் காய்ச்சல் பாதிப்பால் குழந்தைகள் பலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

8 குழந்தைகள் இறப்பு: மூளைக் காய்ச்சல் பாதிப்பு!

பீகார் மாநிலத்தில் மூளைக் காய்ச்சலால் இதுவரை 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details