தினசரி உணவுக்கான ஆதாரத்தைத்தேடி நகரங்களை நோக்கிச் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்ட நாடாக நாம் இருக்கின்றோம். இந்த கரோனா கால சூழல் காரணமாக, வாழ்வாதாரத்தை இழந்த அவர்கள் இப்போது அரை மனதுடன் தங்கள் வீடுகளை நோக்கித் திரும்பிச் செல்கின்றனர். வாழ்க்கைக்கான அச்சுறுத்தல் அவர்கள் ஒவ்வொருவரையும் வேட்டையாடுகிறது. இதயம் நிறைய உணர்வுகளுடன் இப்போது அவர்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கிப் பயணப்பட்டிருக்கின்றனர்.
வேலை உறுதியளிப்பு...
போதுமான பணம் அல்லது உணவு இல்லாத சூழலில் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்தான் இப்போது அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கிறது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 7 கோடி குடும்பத்துக்கு வேலை உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தாண்டு பொது ஊரடங்கு காரணமாக வெறும் 34 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும்தான் வேலை கொடுக்கப்பட்டுள்ளது. தொலைதூர கிராமங்களில் இருந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களைக் கருத்திற்கொண்டு, அவர்கள் பணி அமர்த்தப்பட்டதின் அளவை ஜூன் மாத புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை பிரதிபலிக்கிறது.
ஒற்றை இலக்கத்தில் கரோனா பாதிப்பு; ஐநா பாராட்டு - உலகிற்கு ரோல் மாடலான 'தாராவி'!
இந்த நிதியாண்டில், 7.3 கோடி மக்கள், வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்காக விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 2 கோடிக்கும் மேலானவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர். 2019ஆம் ஆண்டில் 1.45 கோடி பணியாளர்களுக்கு தகுதியான வேலை கொடுக்கப்படவில்லை. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் கூறப்பட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி இந்தாண்டு இது இரண்டு மடங்கு ஆகும். இந்த எண்ணிக்கை, பொருளாதார அறிஞர்களை மிகவும் வருத்தமடைய வைத்ததுடன், குழப்பம் அடையவும் செய்துள்ளது.
நிதி ஒதுக்கீடு...
மத்திய நிதிநிலை அறிக்கையில் முன்பு ஒதுக்கப்பட்ட 61ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலே, ஆத்ம நிபார் பாரத் (சுவாவலம்பம் பாரத் அல்லது தற்சார்பு இந்தியா) என்ற உத்தியின் ஒரு பகுதியாக ஊரக வேலை உறுதியளிப்பு திட்டதின் கீழான நிதி ஒதுக்கீடாக 40ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் மானியமாக மத்திய அரசு கொடுத்துள்ளது. அந்த அளவுக்கு, அரசானது 300 கோடி வேலை நாட்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இது ஏழைகளுக்குப் பயனற்றதாக இருக்கும் என்ற கவலை அதிகரித்து வருகிறது.
வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம்
ஒரு ஆண்டுக்கு ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு, குறைந்தபட்சம் 100 நாட்களாவது வேலை தருவதை இந்த ஊரக வேலைவாய்ப்பு சட்டம் உறுதி அளிக்கிறது. இந்த நூறு நாட்கள் வேலை வரம்பு ஏற்கனவே 40 லட்சம் குடும்பங்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்னொரு 23 லட்சம் குடும்பங்களுக்கு இதே போன்ற திட்டத்தில் ஏற்கனவே 60 நாட்கள் வேலை வழங்கப்பட்டுள்ளது.
கரோனா கவச்: காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளுங்கள்!
லட்சகணக்கான குடும்பங்கள், தினசரி அடிப்படையில் வேலை பார்க்க முடியாவிட்டால், தங்களது பசியை அவர்களால் போக்கிக் கொள்ளமுடியாது. பசியின் காரணமாக தங்கள் வாழ்க்கையை இழப்பதில் இருந்து இதுபோன்ற குடும்பங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இதுபோன்ற தேவைகள் வேண்டும் குடும்பங்களுக்கு உணவு அளிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு என்று இத்தனை நாட்கள் என்ற அடிப்படையில் வேலைவாய்ப்பை உறுதிசெய்ய அரசு முயற்சிகள் எடுக்கவேண்டும்.