நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, ஊரடங்கு காரணமாக சுமார் 50 நாட்களுக்குப் பின்பு கடந்த மே 18அன்று மானேசர், ஹரியானா மாநிலத்திலுள்ள ஆலையைத் திறந்து உற்பத்தியைத் தொடங்கியது. இந்நிலையில், அந்த ஆலையில் பணிபுரிந்த ஊழியருக்கு கடந்த மே 22ஆம் தேதி கரோனா தொற்று உறுதியானது.
இதுகுறித்து அந்த ஆலையின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "கடந்த 15ஆம் தேதி நல்ல உடல்நிலையில் தான் அவ்வூழியர் பணியில் சேர்ந்தார். அவருடைய பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட உடன், அவர் பணிக்கு வரவில்லை. அவருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.