தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அவசர காலம், காங்கிரஸின் சுயநல அரசியலை நினைவுப்படுத்துகிறது- பாஜக ராம் மாதவ்! - காணொளி மாநாடு

டெல்லி: காங்கிரஸின் சுயநல அரசியலை 1975ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலை நினைவுப்படுத்துகிறது என பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் தெரிவித்தார்.

பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ்
பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ்

By

Published : Jul 1, 2020, 10:29 AM IST

டெல்லி பாஜக சார்பில் யுவ சம்வத் என்ற மாநாடு காணொலி வழியாக நடைபெற்றது. இதில் பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் கலந்துகொண்டு ‘தேசிய அவசர நிலை’ என்ற தலைப்பின் கீழ் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “ தற்போது அவசர கால நினைவுகளை நினைவுப்படுத்துவது முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால் தற்போதைய நாட்டின் ஜனநாய அமைப்பு, மதிப்பை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

அவசர காலத்தில் செய்தி நிறுவனங்களின் சுதந்திரம் பரிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்பட்டது” என்றார். மேலும், “1975 ஜூன் 25ஆம் தேதி முதல் 1977 மார்ச் 21ஆம் தேதி வரையிலான அவசர காலம் இந்திய ஜனநாயகத்தின் மீதான மிகப்பெரிய அடியாகும்” என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க...மத்தியப் பிரதேசத்தின் ஆளுநராக ஆனந்திபென் பட்டேல் இன்று பதவியேற்பு?

ABOUT THE AUTHOR

...view details