கேரள மாநிலம், மூணாறை அடுத்த ஆனயிரங்கல், சின்னக்கானல் பகுதிகளில் யானைகள் தொல்லை அதிகரித்து வருகிறது. யானைகளின் வழித்தடம் என்று சொல்லக்கூடிய அப்பகுதியில் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு கேரள வனத்துறை அப்பகுதியில் யானைகள் சரணாயலம் அமைக்க முடிவு செய்துள்ளது. இதன்மூலம் ஆனயிரங்கல், சின்னக்கானல் பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்னை சரியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூணாறு அருகே யானைகள் சரணாலயம் அமைக்க கேரள வனத்துறை முடிவு - munnar forset
கேரளா: ஆனயிரங்கல், சின்னக்கானல் பகுதிகளில் அருகே யானைகளுக்கான சரணாலயம் அமைக்கப்படும் எனக் கேரள வனத்துறைத் தெரிவித்துள்ளது.
இந்த சரணாலயம் கட்டப்பட்டால் யானைகளைப் பாதுகாக்க முடியும் எனவும், யானைகள், மனிதர்கள் இடையேயான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் எனக் கேரள அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தலைமை வனத்துறை அலுவலர் சுரேந்திரகுமார் கூறுகையில், ’ஆனயிரங்கல், சின்னக்கானல் பகுதிகளில் ஆறு கிலோ மீட்டர் சுற்றளவில் யானைகள் சரணாலயம் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். அப்பகுதிக்குள் வரும் குடியிருப்புகள் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்படும். சரணாலயம் யதார்த்தமாக உருவாக்கப்படுவதால் யானைகளுக்கு இயற்கை வழித்தடமாக அமையும்’ என்று கூறினார்.