தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வாகனங்களை வழிமறித்து சாலையில் நடந்து சென்ற யானை - road

நீலகிரி: வாகனங்களை செல்ல விடாமல் சாலையை வழிமறித்து 2 கிலோ மீட்டர் தூரம் சாலையின் நடுவே யானை நடந்து சென்றதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

சாலையில் நடந்து சென்ற யானை

By

Published : Jul 9, 2019, 2:49 PM IST

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து மாயார் பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. மாக்குமூலா என்ற இடத்தில் அந்த பேருந்து செல்லும் போது, யானை வழிமறித்தது. பின் எந்த வாகனத்தையும் செல்ல விடாமல் நடு சாலையில் மெதுவாக 2 கிலோ மீட்டர் தூரம் வரை யானை சென்றது. அப்போது, அரசு பேருந்து ஓட்டுநர் ஒலி எழுப்பியும் அந்த யானை அசராமல் மெதுவாக சென்று பின்னர் முதுமலை வனப்பகுதிக்குள் நுழைந்தது.

அதன்பின், தொரப்பள்ளி சாலை இயல்பு நிலைக்கு திரும்பியது.

வாகனங்களை வழிமறித்து சாலையில் நடந்து சென்ற யானை

ABOUT THE AUTHOR

...view details