தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நூலிழையில் காட்டு யானைகளிடமிருந்து தப்பிய சுற்றுலாப் பயணிகள் - நூலிழை

சாமராஜநகர்: நூலிழையில் காட்டு யானைகளிடமிருந்து உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

யானை

By

Published : Jul 15, 2019, 12:49 PM IST

கர்நாடகா மாநிலம் சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ளது பிலிகிரிரங்கா மலை. இயற்கை எழில் கொஞ்சும் பிலிகிரிரங்கா மலையைச் சுற்றி பார்க்க, நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

மலைப் பாதையில் சுற்றித் திரிந்த யானைகள்

இந்நிலையில் நேற்று வழக்கம்போல பிலிகிரிரங்கா மலைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், மலைப் பாதையில் சுற்றித் திரிந்த யானைகளைக் கண்டு பரவசமடைந்து புகைப்படமெடுக்க முயன்றனர். இதனால் ஆவேசமடைந்த யானைகள், சுற்றுலா பயணிகளைத் தாக்க வந்தன. இதில், சுற்றுலாப் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சுற்றுலாப் பயணிகளை புகைப்படம் எடுக்க வேண்டாம் என, வனத்துறையினர் பலமுறை எச்சரித்தும், அதை யாரும் பின்பற்றுவதில்லை என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details