தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

யானை தவறுதலாக வெடிமருந்து நிரப்பப்பட்ட பழத்தை உண்டிருக்கலாம் - சுற்றுச்சூழல் அமைச்சகம் - கேரளா தற்போதைய செய்தி

டெல்லி: கேரளாவில் கருவுற்ற யானை தவறுதலாக வெடிமருந்து நிரப்பப்பட்ட அன்னாசிப் பழத்தை உண்டிருக்கலாம் என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Elephant
Elephant

By

Published : Jun 8, 2020, 4:58 PM IST

கேரள மாநிலம் பாலக்காட்டிலுள்ள அம்பலபாரா என்ற பகுதியில், உணவுத் தேடி வந்த கருவுற்ற யானை வெடி வைத்திருந்த அன்னாசிப் பழத்தைச் சாப்பிட்டதால் படுகாயமடைந்து உயிரிழந்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், கேரள வனத்துறையும் காவல் துறையும் இணைந்து இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சுற்றுச்சூழல் அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், கருவுற்ற யானை தவறுதலாக வெடிமருந்து நிரப்பப்பட்ட அன்னாசிப் பழத்தை உண்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும், "இது தொடர்பாக கேரள அரசுடன் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தொடர்பில் உள்ளது. யானை உயிரிழந்ததற்கு காரணமாணவர்களைக் கைது செய்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கில் இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூரமான, மனித தன்மையற்ற செயலை செய்த மற்றவர்களையும் கைது செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பிரிவுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரம் இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் போலிச் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். வனத்துறை அமைச்சகமும் கேரள அரசும் இந்த விஷயத்தை எவ்வித சார்ப்புமின்றி கையாளுகின்றன.

மேலும், இந்த வழக்கின் விசாரணை விரைவில் முடிக்கப்பட்டு, வரும் காலங்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க முன்மாதிரியான தண்டனையை வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோவிட்-19 இறப்பு விகிதம்: முதலிடத்தில் குஜராத்!

ABOUT THE AUTHOR

...view details