கேரளா மாநிலம் பாலக்காட்டில் வெடி மறைத்து வைக்கப்பட்டிருந்த அன்னாசி பழத்தை சாப்பிட்டு கர்ப்பிணி யானை உயிரிழந்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, மலப்புர மாவட்டத்தில் விலங்குகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. வேட்டைக்காரர்கள், வனவிலங்குகளை கொலை செய்பவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை என தெரிவித்தார்.
சம்பவம் நடைபெற்ற பாலக்காட்டை விட்டுவிட்டு மலப்புரம் குறித்து மேனகா கருத்த தெரிவித்ததால், இது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், கேரளாவையும், மலப்புரத்தையும் வில்லனாக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.