சத்தீஸ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டத்தில் உள்ள சதுப்பு நிலத்திற்குள் யானைக்குட்டி ஒன்று சிக்கியுள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தம்தாரி மாவட்ட வன அலுவலர் அமிதாப் வாஜ்பாய் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ஆனால், சதுப்பு நிலத்தில் சிக்கிய யானைக் குட்டி உயிரிழந்த நிலையில் அங்கு கிடந்தது. காரிபந்த் மாவட்ட வனப்பகுதியிலிருந்து தம்தாரி மாவட்ட வனப்பகுதிக்குள் 21யானைகள் வந்ததாகவும் அந்த யானைக் கூட்டத்திலிருந்து காணாமல் போன குட்டியானைதான் உயிரிழந்தது என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.