இந்திய வனத்துறை அலுவலர் சுசாந்தா நந்தா, தனது ட்விட்டர் பக்கத்தில் யானை தனது தும்பிக்கையால் மின்சார வேலியை உடைக்கும் காணொலியைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், யானைகள் வெளியே செல்வதைத் தடுப்பதற்காக 5 கிலோ வால்ட் அளவில் சூரிய மின்சார ஃபென்சிங் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை உடைத்த யானையின் புத்திசாலித்தனம் சுவாரஸ்யப் படவைக்கிறது எனப் தெரிவித்துள்ளார்.
மின்சார வேலியை உடைத்து அசால்ட்டாக நடந்து சென்ற யானை! - elephant break electric fence
மின்சார வேலியை உடைத்து விட்டு வயர் மீது கால் வைக்காமல், புத்திசாலித்தனமாக நடந்து செல்லும் யானையின் காணொலி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
யானை
தற்போது இந்த காணொலியைப் பல தரப்பு மக்கள் பகிர்ந்து, யானையின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: தந்தம் திருடி விற்க முயன்ற நால்வர் கைது!