புதுச்சேரி மாநிலம் ஆளுநர் மாளிகையில் சூரிய ஒளியை கொண்டு 15 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டது. இந்த நிகழ்வை துணைநிலைஆளுநர் கிரண்பேடி தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநரின் செயலாளர் தேவநிதிதாஸ், மின்துறை பொறியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பின்னர் கிரண்பேடிக்கு சோலார் பேனர்கள் இயங்கும் முறை குறித்து மின் பொறியாளர்கள் விளக்கமளித்தனர்.
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் தயாரிப்பு மேலும் இந்த சூரிய சோலார் பேனல்கள் கொண்டு ஆளுநர் மாளிகையில் மாதம் ரூபாய் 2000 வரை மின்சாரம் சேமிக்கப்படும் என்றும் மின்துறை பொறியாளர்கள் தெரிவித்தனர். சோலார் பேனல்கள் அமைக்கப்பட்ட இடம், அதற்கான சுவிட்சுகள் இயங்கும் இடம் உள்ளிட்டவற்றை மற்ற அலுவலர்களோடு ஆளுநர் கிரண்பேடி பார்வையிட்டார்.
இதையும் படிங்க:
சிஏஏ-ஐ பாடத்திட்டத்தில் இணைப்பதா? மாயாவதி காட்டம்