தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெற்றிப் பயணத்தை நோக்கி காங்கிரஸ்? - இடைத்தேர்தல் முடிவுகள்

டெல்லி: பிகார், குஜராத் ஆகிய மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

Congress

By

Published : Oct 24, 2019, 11:37 PM IST

நாடு முழுவதும் 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. பிகாரில் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் குஜராத்தில் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

பாஜக ஆளும் குஜராத்தில் மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் மூன்று தொகுதிகளில் பாஜகவும் வெற்றிபெற்றுள்ளன. சமஸ்தீபூரில் நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி பரிஷத் வெற்றிபெற்றுள்ளது. பிகாரில் ஆளும் பாஜக - ஜக்கிய ஜனதா தள கூட்டணி மூன்று தொகுதிகளில் தோல்வி அடைந்துள்ளது. கேரளாவில் இடது ஜனநாயகக் கூட்டணி மூன்று தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.

பஞ்சாபில் மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. மூன்றையும் காங்கிரஸ் கட்சியே வென்றுள்ளது.

இதையும் படிங்க: ஹரியானாவில் ஆட்சியமைக்க உரிமை கோர பாஜக முடிவு?

ABOUT THE AUTHOR

...view details