ஒடிசா மாநிலம், பாத்ராக் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தும் மையத்தில் இன்று காலை 65 வயது ராதாஷ்யாம் என்பவர் திடீரென உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து அவரின் திடீர் மரணத்திற்கு காரணம் தெரிந்துக்கொள்ள சுகாதாரத்துறை, அவரின் உடலிலிருந்து ஸ்வாப் பரிசோதனை செய்துள்ளது. இதன் மூலம் அவர் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தாரா என்பது தெரியவரும்.
கொல்கத்தாவிலிருந்து ஒடிசாவிற்கு திரும்பிய ராதாஷ்யாமிக்கு வயது மூப்பின் காரணமாக சில உடல் நலக்குறைவுகளுடன் நீரிழிவு நோயும் இருந்ததாக அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை செய்துவருகிறார்கள்.
இதையும் படிங்க:வெறும் முகக் கவசம் அணிந்தால் மட்டும் கரோனாவிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியாது